மீண்டும் துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ்!!

 


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’அண்ணாத்த’ தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் Sarkaru Vaari Paatadagger மற்றும் நானியுடன் ‘ராங்டே’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ’மரக்கார்’ உள்பட பல திரைப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் சமீபத்தில் நானியுடன் நடித்து வரும் ‘ராங்டே’ என்ற படத்திற்காக துபாய் சென்றிருந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நாடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மகேஷ்பாபுவின் திரைப்படத்திற்காக அவர் துபாய் செல்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


ஏற்கனவே மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினர் துபாயில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பதும் அந்த படப்பிடிப்பில் தற்போது கீர்த்தி சுரேஷும் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரசுராம் இயக்கத்தில் எஸ்.தமன் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு சங்கராந்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.