அரசாங்கம் வினையைத் தேடிக்கொண்டுள்ளது!


 ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதை நாமும் விரும்பவில்லை.

ஆனால் இராணுவத்தினரை உயர் அதிகாரங்களில் பதவியில் அமர்த்துதல் , மஹர சிறைச்சாலை சம்பவம் உள்ளிட்டவற்றால் இந்த அரசாங்கம் தானகவே நெருக்கடியை தேடிக் கொண்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொரோனா விவகாரங்கள் தொடர்பில் போலியான தகவல்கள் கூறப்படுகின்றன.  தொற்று முழுமையாக குணமடைய முன்னர் தொற்றாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்கு விமல் வீரவன்ச - சாகர காரியவசம் ஊடாக போலியான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

சர்வதேசத்தின் மத்தியில் இந்த நாடகங்கள் செல்லுபடியாகாது. சீனாவின் நட்பு நாடான பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சீனாவின் நிபந்தனைகளுக்கு அமைய இந்தியாவை புறந்தள்ள அரசாங்கம் முயற்சிக்கிறதா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் மூலமும் போலி நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் நியாயமானதென்றால் அதனுடன் தொடர்புடைய அனைவரையும் எவ்வித பேதமும் இன்றி சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதை நாமும் விரும்பவில்லை. ஆனால் இராணுவத்தினரை உயர் அதிகாரங்களில் பதவியில் அமர்த்துதல் , மஹர சிறைச்சாலை சம்பவம் உள்ளிட்டவற்றால் இந்த அரசாங்கம் தானகவே நெருக்கடியை தேடிக் கொண்டது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.