இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்து!

 


தமிழகத்தில் உள்ள மாவட்டம் ஒன்றில் இன்று இடம்பெற்ற பாஜகவின் இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இலங்கை தமிழர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்ற பாஜகவின் இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களின் மண்ணுக்கு வருவது குறித்து பெருமிதம் அடைகின்றேன்.


முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார் என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங் அது தமிழ்நாட்டை கௌரவப்படுத்தும் நடவடிக்கையில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.


1974 இல் காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கையிடம் கையளித்தவேளை வாஜ்பாய் அதனை கண்டித்தார் என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கு எதிராக வாஜ்பாய் நீதிமன்றம் சென்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் மகள் புரட்சி தலைவி அம்மாவே முதலாவது வாஜ்பாய் அரசாங்கத்தை முழுமனதோடு ஆதரித்தவர் என்பதை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


வாஜ்பாய் போன்று இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டுடன் விசேட உறவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் தமிழ் அகதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மோடி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


2015 இல் பிரதமரான பின்னர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற ஒரேயொரு பிரதமர் அவர். உள்நாட்டு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் வீடுகளை வழங்கியுள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.