பிரெஞ்சு அரசுக்கும் ஈழத்தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாட்டைத் மக்கள் எழுச்சியோடு தெரிவிப்போம். !

 



லங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு கிட்டவேண்டிய அரசியல் தீர்வுக்கு, அம்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் ஆட்சி அதிகாரங்களில் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவுகள் வலுவடைந்து வரும்வேளை அவற்றைக் குறிவைத்து கோழைத்தனமாக முறியடிக்கவும் சிங்கள தேசம் உண்மைக்கு மாறான பொய்யான பரப்புரைகளையும், போராட்டங்களையும் செய்ய முற்படுகின்றது.

அந்த வகையில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களே எங்களிடம் இப்போது மிஞ்சியிருப்பது மனித தர்மம் ஒன்று மட்டும்தான். சர்வதேசத்திற்கும், பிரெஞ்சு அரசுக்கும் ஈழத்தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாட்டைத் மக்கள் எழுச்சியோடு தெரிவிப்போம்.
ஒருநாள் நாம் செலவு செய்யும் சில மணித்துளிகள் எமது நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் மிகப்பெரும் சமுத்திரமாக மாறட்டும்.
01.03.2021 திங்கட்கிழமை 13.00 மணிக்கு பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபெறும் இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நாமும் கலந்து கொண்டு எம்மவர்களையும் கலந்து கொள்ளச்செய்வோம்.
இத்தகவலை அனைவருக்கும் பகிர்வோம் பங்காளர்களாவோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’’

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.