இலங்கைக்கு கடும் கண்டனம் வெளியிட்ட இந்தியா!!
இலங்கை கடற்படையின் கப்பலில் மோதி பலியான தமிழக மீனவர்கள் 4 பேர் தொடர்பாக இலங்கைக்கு, இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர்கள் நால்வரு்ம் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாகவே இந்திய தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தவிவகாரம் தொடர்பாக இன்றைய மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா, அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில்,
‘தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை