கொவிட்டால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தினார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.

இன்று - கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும்,கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்று இதுவரை 936 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 74052 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.