அனைத்து பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீர்!

 


பாடசாலைகள் அனைத்திற்கும் சுத்தமான குடிநீர் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.நீர்வழங்கல் அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பல பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். உரிய அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக அறிவிக்கவேண்டும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளிலேயே இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகள் தொடர்பாக அறிவிக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

அதன் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.