பேரெழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் சென்றுள்ளது!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் சென்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இறுதிநாளாக பொலிகண்டி வரையான பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தது.

இதையடுத்து கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி ஊடாக யாழ். மாநகர எல்லைக்குள் பேரணி சென்றுள்ளது.

யாழ். மாநகர எல்லை வளைவுப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியை வரவேற்றதுடன், அங்கிருந்தும் பேரணியுடன் பெருமளவானோர் இணைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.