முள்ளியவளை மக்களின் அவலநிலை!


 முள்ளியவளை நாவற்காடு சுடலைக்குச் செல்லும் வீதியில் குழிகளில் ஊற்று நீர் நிரம்பிக் காணப்படுவதாக தெரியவருகிறது.

இதனால் அந்த தண்ணீர் நிரம்பிய குழிகளை தாண்டி இறந்தவரின் சடலங்களை கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதும் ஊற்று நீர் வீதியால் பாய்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவளை நாவல்காடு சுடலையினை நம்பி பலநூற்றுக்கணக்கானவர்கள் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆயிரம் வரையான குடும்பங்கள் இந்த சுடலையை பயன்படுத்தி வருகின்றன.

இந்த சுடலைக்கான வீதி இதுவரை செப்பனிடப்படாத நிலையில் இறந்தவர்களின் உடலினை கொண்டு செல்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள சுடலைகள் மற்றும் சுடலைக்கான வீதி என்பன பிரதேசசபை உருவாக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்துகொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.