ஜெனீவாவில் நடுநிலை வகிக்கும் இந்தியா, ஜப்பான்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் கருத்துகளை முன்வைத்துள்ளன.
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை முன்வைப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன.
இதற்கு பிரித்தானியா தலைமைத்துவம் வழங்கவுள்ள நிலையில் அதற்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. அத்துடன் 15 நாடுகள் புதிய பிரேரணையை ஆதரித்துள்ளன. இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.
இந்நிலையில் பிரித்தானியா, நோர்வே, கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.
மேலும் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைத்தீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், வியட்நாம், பெலாரஸ், வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இவற்றில் உள்ளடங்குகின்றமை குறிபிடத்தக்கது.
கருத்துகள் இல்லை