அமெரிக்க புதிய ஜனாதிபதி இலங்கைக்கு வாழ்த்து!!
இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தொிவித்துள்ளார்.
இந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றை தோற்கடிக்கவும் உலகப் பொருளாதார நிலையை வழமைக்கு கொண்டு வருதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அயராது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை