மூன்றாவது முறையாக முடக்கப்படுகின்றது விக்டோரியா!
அவுஸ்ரேலிய மாநிலமான விக்டோரியா மூன்றாவது முறையாக பிரித்தானியாவின் கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிக்காக முடக்கப்படும்.
மெல்போர்ன் ஹோட்டலில் நோய்த்தொற்று ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளியிடமிருந்து 13 தொற்றுகளை இந்த வாரம் அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த நிலையில் அங்கு முடக்கநிலை அமுல்படுத்தப்படவுள்ளது.
முடக்கநிலை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி புதன்கிழமை முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், மாநில தலைநகரான மெல்பேர்னில் தொடரும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரு நாளைக்கு 30,000 பார்வையாளர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழமை முதல் பார்வையாளர்கள்; கலந்து கொள்ள தடை விதிக்கப்படும். டிக்கெட் திருப்பித் தரப்படும் என்று போட்டி இயக்குனர் கிரேக் டைலி தெரிவித்தார்.
விக்டோரியன் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், ‘தற்போதைய பரவல் டென்னிஸ் வீரர்கள் பயன்படுத்தும் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களுடன் இணைக்கப்படவில்லை’ என கூறினார்.
கருத்துகள் இல்லை