டிரெண்ட் ஆன சிம்புவின் 'குட் மார்னிங்'!!


 நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை சிறிதளவு கூட குறையவில்லை என்பது அவ்வப்போது சமூக வலைதளங்களில் சிம்பு குறித்த ட்ரெண்டிங் ஏற்படுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.


தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியுள்ள சிம்பு, சமீபத்தில் ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படத்தை வெளியிட்டார். தற்போது ’மாநாடு’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் சிம்பு, ’பத்து தல’, கெளதம் மேனன் இயக்கும் படங்கள் உள்பட ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களிலும் அவர் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்தது. அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றுடம்புடன் சட்டை இல்லாமல் காபி குடிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’குட் மார்னிங்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.


இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளன. சிம்பு என்ன செய்தாலும் அது இந்திய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது வழக்கமாக இருக்கும் ஒன்றாக உள்ள நிலையில் இந்த புகைப்படமும் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.