'மாநாடு' டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு!

 


சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே


இந்த நிலையில் வரும் 3ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் சிம்புவின் பிறந்தநாள் வருவதை அடுத்து அன்றைய தினம் சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ’மாநாடு’ படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சிம்புவும் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் தற்போது மாநாடு டீஸர் பிப்ரவரி 3ஆம் தேதி 02.34 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி 2.34 மணியை எதிர்நோக்கி சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் இப்போதே இந்த படத்தின் டீசர் குறித்த ஹாஷ்டாக் வைரலாக தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது


சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் வெங்கட்பிரபு இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.