விராட் கோலி- அனுஷ்கா ஜோடியின் குட்டி தேவதையின் பெயர்!!

 


இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு நடிகை அனுஷ்கா திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தயாரிப்பு, விளம்பரப் படங்கள் எனப் பிசியாகவே இருந்து வந்தார். இந்நிலையில் கொரோனா லாக்டவுணின் போது தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின்போது முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய கேப்டன் விராட் கோலி தன்னுடைய மனைவியுடன் நேரத்தை செலவிட்டார். அப்போது இந்த ஜோடி எடுத்துக் கொண்ட தலைகீழ் யோகா புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.


இதுவரை குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் வெளியிடாத அனுஷ்கா முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் குழந்தையைப் பார்க்கின்றனர். மேலும் அனுஷ்கா வெளியிட்டு உள்ள அந்தப் பதிவில் குழந்தைக்கு “வாமிகா” எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் இதயங்கள் நிறைந்து உள்ளதாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்து உள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.