கொழும்பு அரசியலில் திடீர் குழப்பம்!

 


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இதனால் கொழும்பு அரசியலில் அவசர சந்திப்புகள் இடம்பெற்று வருவதாகவும், இந்த முறுகல் நிலையை தீர்த்து வைக்க தேரர்கள் களமிறங்கியுள்ளதாகவும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவம் தொடர்பாக விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தமது கட்சி குறித்து கருத்து வெளியிட விமலுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் அறிவிப்பு விடுத்ததுடன், விமல் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் சிலர் விமலை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு விமலும் பதிலடி கொடுக்க பிரச்சினை உச்சம் தொட்டது.

இந்நிலையில், அரசுக்கு ஆதரவு வழங்கும் 12 கட்சிகளின் தலைவர்கள் விமல் வீரவன்சவின் வீட்டில் நேற்றிரவு அவசர சந்திப்பை நடத்தினர்.

இதன்போது அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதாகவும் தீர்மானம் எட்டப்பட்டது. இருப்பினும் சர்ச்சை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.