பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை!


 பஸ்ஸில் பயணித்த இரு பெண்களுக்கு மயக்க மருந்து வழங்கி, அவர்களின் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த இரு பெண்களுடன், சந்தேக நபர் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மருந்து அடங்கிய உணவை வழங்கியுமுள்ளார்.

உணவை எடுத்துக் கொண்ட இரு பெண்களும் மயக்கமடைந்த பின்னர் அவர்களிடமிருந்து 2 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலியாவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.