இலங்கை அகதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை!


 இந்தியாவில் உள்ள 50,000ற்கும் அதிகமான இலங்கை அகதிகளில் சிலரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

புகலிடம் கோரியவர்களுக்காக இந்தியாவில் பல முகாம்கள் இருப்பதாகவும் தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் 50,000ற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனைவிட முகாம்களுக்கு வெளியேயும் பலர் இருப்பதுடன், கணிசமானவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முகாம்களில் உள்ள அகதிகளுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள், கல்வி, அடிப்படைத் தேவைகள் மற்றும் நலன்புரி என்பன வழங்கப்படுவதுடன், சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகரால் இவை கண்காணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.