பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை!


 வவுனியா - புளியங்குளம் பகுதியில் நேற்று ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நேற்றயதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் சென்றிருந்தார்.

அவரை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.