இசையரங்கில் காலடி வைக்கும் சுவிற்சர்லாந்து தமிழ் பெண்!


 உலகப் புகழ்பெற்ற சுவிற்சர்லாந்தின் மாண்ட்ரீக்ஸ் ஜாஸ் (Montreux Jazz) இசை நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பின்புலத்தைக்கொண்ட பிரியா ரகுவும் பங்குபற்றுகிறார். இதன்மூலம், உலக இசை அரங்கில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சுவிற்சர்லாந்தின் பாரம்பரியமான மாண்ட்ரீக்ஸ் ஜாஸ் இசை நிகழ்ச்சி உலகப்பிரபலமானது. ஜாஸ் இசையை முன்னிலைப்படுத்திய இசை நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கம்.

இம்முறை, ஜாஸ் இசையுடன், ஏனைய பல இசைகளிற்கும் இடமளிக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். இசை நிகழ்விற்காகக உலகளவில் பிரபலமான, அதேநேரம் புதிய கலைஞர்களையும் கொண்ட சுமார் 20 பேரைக் கொண்ட இசை கலைஞர் குழுவை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதில், சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் பின்னணியை கொண்ட பிரியா ரகுவும் இடம்பிடித்துள்ளார்.

வரும் ஜூலை மாதம் இசை நிகழ்வு நடக்க வேண்டும். எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இசை நிகழ்வை எந்த வடிவத்தில் நடத்துவது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு அரங்கங்களில் தொடராக இசை நிகழ்வு நடப்பது வழக்கம். இம்முறை ஏற்பாடுகள் இன்னமும் தீர்மானிக்கவில்லை.

2020ம் ஆண்டு வெளிவந்த FiFA 2020 எனக்கு என்ற உதைபந்தாட்ட கணினி விளையாட்டின் முகப்பு பாடலை பாடியதன் மூலம் பிரபலமான பிரியா, அதன்பின் தொடர்ந்து பேசப்பட்டு வந்தார்.

ஜாஸ் இசை நிகழ்வு செய்தியோடு பிரியாவின் படம் தாங்கிய முகப்புப் பக்கத்தோடு இன்றைய 20min செய்தித்தாள் வெளிவந்துள்ளது. இந்த இலவச செய்தித்தாள் சுவிற்சர்லாந்தில் மிகப்பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.