சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு அறிவிப்பு!


 பிப்ரவரி 8ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டுக்குள் நுழைவதற்குமுன், மின்னணு முன்பதிவு ஆவணம் ஒன்றை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயில் மூலம் வரும் அனைவரும் இந்த மின்னணு நுழைவு படிவத்தை பூர்த்தி செய்திருக்கவேண்டும்.

இதுவரை, கொரோனா அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வருவோர் மட்டுமே அவர்களது தொடர்பு முகவரியை அளித்தால் போதும் என்று இருந்த நிலையில், தற்போது சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைவரும் தங்களைக் குறித்த விவரங்களை தெரியப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை, தொற்றுக்கு ஆளானோரை விரைவாக அடையாளம் கண்டு தொற்றுச் சங்கிலியை உடைக்க உதவும் என்பதால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய நுழைவு படிவம் தற்போது இணையத்தில் இல்லை, அது பிப்ரவரி 8க்கு முன் இணையத்தில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.