நானெனும் நான் -கவிதை!!

 


ஓசையற்று நகரும் 

தாரகைகளில் தான் 

எத்தனை ஒளிக்கீறல்கள்....

வெண் சங்குகள்

ஒருபோதும்

வீம்பு கொள்வதில்லை....

அந்தி மந்தாரைகளில் 

அடுக்குகள் இல்லை - ஆனால்

அழகற்றவை அல்லவே....

சிரிப்பென்பது

சிந்தனையற்ற நிலையின்

அறிமுகமே....

காட்டு மலர்களுக்கும்

கடவுள் அழகை 

கொடுத்திருக்கிறார். 

மனமந்திகளின்  தாவல்

மதியீனத்தின்

மறுவடிவே....

உன் செயல்களுக்கு

நீயே காரணகர்த்ததா....

உன் இருப்புணர்வே

உன் சொர்க்கமாகிறது...

அது உன் சுதந்திரம் - அதில்

மகிழ்ச்சி கொள்....

நான் என்பது

நானேதான்.......கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.