சாக்லேற் கனவுகள்.......17- கோபிகை!!

 


ஆழமான சிந்தனையுடன் 

அமைதியாய் நின்றான்

ஆதித்தன்.


அனுதி இல்லாத 

ஒரு வாழ்க்கையை 

அவனால் 

வாழ்ந்துவிட முடியுமா?


'அவன் அவளை 

கண்ணுக்குள் வைத்து

காப்பது போல,

அத்தை மாமாவை

பெற்றவர்களாய் பேணுவதைப்போல

யார் செய்வார்கள்?


அவளுக்குப் பிடித்தது,

அவள் நினைப்பது,

அவள் ரசிப்பது

அவள் வெறுப்பது

அத்தனையும் அவனுக்கு

அத்துப்படியாயிற்றே....


நான்கு வயதில்

பிறந்த குழந்தையாய்

அவன் மடியில்

கொடுக்கப்பட்டவள், 


அவள் நடந்து திரிய

அவன் அதிகம் 

விட்டதில்லையே.....

அவன் தோள்தானே

அதிகமான  பொழுதுகளில்

அவளின் இருப்பிடமாய் 

இருந்தது. 


பார்த்துப் பார்த்து

அதிசயித்த தேவதையை

அடுத்தவர் கையில்

கொடுத்துவிட்டு

நிம்மதியாய் இருந்துவிட

முடியுமா அவனால்?


'உன் கவலைகளை 

உன் ஆசைகள் மூலம்

நீயே தேர்வு செய்கிறாய்' என

எப்போதோ புத்தகத்தில்

வாசித்த ஞாபகம்

சிந்தனையில் தோன்றியது. 


கனிகாவின் மீதான ஆசை

அனுதியை அவனிடமிருந்து

ஒட்டுமொத்தமாய் 

பறித்துவிடும் என்பதை

உணர்ந்துகொண்டவன்,

தெளிவான மனதுடன் 

மெல்ல நிமிர்ந்தான். 


'கனிகா......'

அவன் உச்சரித்த விதத்தில்

உயர்ந்து சிரித்தது

அவள் வதனம். 


'என்னைத் தவிர 

வேறு யாராலும்

அனுதி எனும் 

வண்ணம் கலையாமல்

சீராட்ட முடியாது.....


பெரும்பாலும் திருமணங்கள்

பெண்களின் வாழ்வில்

பெயரறியாத 

மாற்றமொன்றைக்

 கொடுக்கிறது....


அனுதியின் குறும்புகளோ

செல்லச் சிரிப்புகளோ

கொஞ்சம் கலைந்தாலும்

எங்களால் தாங்கமுடியாது....


அவள் அவளாகவே

இருக்கவேண்டுமென்றால்

நான் அவளோடுதான் 

இருக்கவேண்டும். 


'அனுதியை நான்

காதலிக்கிறேனா' என்றால்,

எனக்கு இப்போது

பதில் தெரியவில்லை.....


ஆனால்,

அவள் மட்டும்தான் 

என் மனைவி என்பதில்

மாற்றமேதுமில்லை.....


உன் மனதில் சலனம் வர

நான் காரணமாகிவிட்டேன்....

என்னை மன்னித்துவிடு

அவன் தலை தரைபார்த்தது.


'ஆதி ......ஏன்....இப்படி

தரையைப் பாக்கிறீங்க,

எனக்கு வருத்தமில்லை,

அனுதி மீது பொறாமைதான்....'


அவள் வார்த்தைகேட்டு

மனம் கனக்க

விலுக்கென்று 

நிமிர்ந்தான் ஆதி. 


'அவள் மாதவம் 

செய்திருக்கிறாள்,

அதன் பலனாகத்தான்

இந்தநேசம் கிட்டியிருக்கிறது....'


'உங்கள் மனதை 

உங்களுக்கு உணர்த்தவே

இன்றைய சந்திப்பு...

இந்தக் கேள்வி....

எல்லாம்........'


'நான் வர்றன் ஆதி'

என்றபடி நடந்தவளை

நன்றியோடு பார்த்தான்

ஆதித்தன்.


கனவுகள் தொடரும்

கோபிகை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.