சொக்லேற் கனவுகள் 19- கோபிகை!!

 


நாட்கள் உருண்டோடி 

மாதங்களாயின.....

மாதங்கள் ஆண்டுகளாய்

உருப்பெற்று முடிந்தது. 


அது ஒரு பெப்ரவரி மாதம்,

பனியின் சிலும்பல்கள்

மெய்யெங்கும் மெல்ல

ஊசித்துகள்களாய் மேய்ந்தன.


பல்கலைப் படிப்பு முடிந்து

நடனம்,சங்கீதம் இரண்டையும்

வெளியே கற்றபடி, 

அம்மாவிடம்

சமையலையும் கற்றுத்

தேறினாள் அனுதி.  


சிறுவயது முதலே

அத்தையைப் போலவே

நாட்டியம், பாட்டு 

இரண்டிலுமே 

ஆர்வம் அதிகம் 

அவளுக்கு. 


அன்று வகுப்புகள் 

இல்லையென்பதால்

போர்வையை இழுத்துப்

போர்த்தியபடி உறக்கத்தினுள் 

அமுங்கினாள். 


அலைபேசியில் 

மெல்லிய அலையோசை...

குறுந்தகவல் ஒலியில்

கண்மடல் விரித்தாள். 


'இன்று காதலர் தினமாச்சே..

ஒருவேளை ஆதிதானோ?,'

'இத்தனை காலம் சொல்லாததை

இன்று சொல்லப்போகிறானோ,'


எண்ணங்கள் மனதில் விரவ

வாரிச்சுருட்டியபடி

எழுந்து அமர்ந்தவள்,

பாய்ந்து அதனை எடுத்தாள். 


வட்ஸ்அப்பில் குறுந்தகவல்,

அனுப்பி இருந்தது 

ஆதி அல்ல,

சந்துதன்.....


'எருமை....எருமை.....

எப்ப பார், ஆசுபத்திரியைக் 

கட்டிக்கொண்டே அலையும்...

அது மெசேஜ் அனுப்பிட்டாலும்......'


மனதிற்குள் திட்டினாலும்

மனதோரம் நாணியது..

'எதற்காக இத்தனை அலம்பல்,

ஆதியின் அன்பிற்காகவா?'


தன் வினாவிற்கு

தானே விடை தந்தாள். 

'இந்த உலகத்தில் 

அதிகம் அவள் நேசிப்பது

யாரென்றால் .......,

அது ஆதி தானே,

அவனுக்கும் அப்படித்தானே, 

அவள் கேட்க நினைப்பது

எதை?' 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.