'சொக்லேற் கனவுகள் ' 24 - கோபிகை!!
'கடவுளே....
இந்த அற்புத தருணத்திற்கு தானே
நாங்கள் தவமிருந்தது.....'
அனுதியின் அம்மா கூற.......
'ஓம் அண்ணி......
இப்பதான் இது ரெண்டுக்கும்
நல்லா புரிஞ்சிருக்கு'
ஆதியின் அம்மா சிலாகித்தார்.
காலம் முட்களையும்தூவும்
என்பதை அறியாமல்
ஆனந்த ஆர்ப்பரிப்பில்
திழைத்தனர் அனைவரும்......
நாட்கள் ஒவ்வொன்றும்
பூக்களின் வாசத்துடன்
தேன் தூவலாய் இனித்தது
அனுதிக்கும் ஆதிக்கும்....
நேரம் ஒன்பதை தொட்டது,
'தூங்கலாமே' என நினைத்தபடி,
கட்டிலில் விழுந்த அனுதியின்
அலைபேசியின் அழைப்பொலி.....
எடுத்துப் பார்த்தாள்,
ஆதியேதான்.....
'ஏய்......ஏஞ்சல்......'
என்றான் காதுக்குள்....
'என்னடா?.......'
வேண்டுமென்றே
அவனைச் சீண்டினாள்
இவள்.
'எவ்வளவு பாசமா
கூப்பிட்டேன்....,
ஏன்டி இப்பிடி
கரடிமாதிரி
கத்துறாய்?'
அவன் கேட்டதில்,
பாசத்தில் தகித்த உள்ளம்
பாகாய்உருகியது
இவளுக்கு......
அவன் வார்த்தைகளில்
செல்ல தழுவலும்
மழலை நேசமும்
மாறாமல் கிடந்தது.
'சும்மாடா....'
பதில் சொல்லிவிட்டு
மௌனமாய் இருந்தாள்
அனுதி....
'என் அனுமாவை
எனக்குத் தெரியாதா?'
அவன் பதிலில்
அளவில்லா உவகை........
ஆதியைத் தவிர, -தன்னை
யாராலும் புரிந்துகொள்ள
முடியாதென்ற எண்ணமே
உதட்டில் புன்னகையானது....
'அனு.......'
அவன் அழைத்ததில்...
'ம்.... சொல்லு.......'
இவளும் குழைந்தாள்....
'நான் உன்னை
ரொம்ப மிஸ் பண்றன்டி'
கிளுக்கெனச் சிரித்தாள்
அனுதி....
'என்னடி சிரிப்பு?,'
'என் தவிப்பு
உனக்கு சிரிப்பாயிருக்கோ?'
சினமாய் கேட்டான்....
'அப்பா முழிப்பாதான்
இருக்கிறார்....
இரு சொல்லிட்டு வர்றன்..'
இன்னும் சீண்டினாள் அவனை....
'உலகத்தில எல்லாரும்
காதலிக்கிறான்,
எனக்கு வாய்ச்சமாதிரி
யாருக்கும் கிடைச்சிருக்காது'
புலம்பினான் ஆதி....
'புரியுது தானே...
விடவேண்டியது.....
எதுக்கு இப்பிடி
புலம்ப வேணும்?'
என்றவளிடம்,
'ஆண்- பெண் ஈர்ப்பென்பது
மிக வலியது பெண்ணே.....
காதலில்லாமல்
வாழ்க்கையில்லை' என்றான்.....
'காதல்
பார்த்துப் பார்த்து
அதிசயிக்கும் நட்சத்திரம்
என்றாலும்
பார்த்துக்கொண்டே விழும்
படுகுழியாம்...'
தெரியுமோ உனக்கு,
என்றாள் அனுதி.
கனவுகள் தொடரும்
கோபிகை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை