இசை அசுரன் ஜிவி பிரகாஷின் அடுத்த பட அறிவிப்பு!

 


நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசை ஆகிய இரண்டு துறைகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவரது நடிப்பில் சுமார் 10 படங்கள் உருவாகி வரும் நிலையில் இசையமைப்பிலும் அவர் பிஸியாக உள்ளார் என்பதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்க உள்ள ‘அருண் விஜய் 33’ என்ற படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ’அருண்விஜய்யின் 33வது படமும், இயக்குனர் ஹரியின் 16வது படமுமான எங்களது அடுத்த படத்தில் இசை அசுரன் ஜிவி பிரகாஷ் அவர்கள் இணைந்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளது.


அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.