சித்தவைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்!!

 


90s கிட்ஸ்கள் இடையே பிரபலமான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 78


கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் சிவராஜ் சிவகுமாரின் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததே. இவர் 90s கிட்ஸ்கள் இடையே பிரபலமானவர் என்பதும் மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சிகிச்சை அளித்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை சேலம் சிவராஜ் தாத்தா என்றே பலர் அழைத்து வருவது உண்டு


இந்த நிலையில் கடந்து சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த சிவராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் அதிகாலையில் காலமானார். இதனை அடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக இடமான சிவதாபுரத்திலுள்ள அகஸ்தியர் மாளிகையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது


பாலியல் சம்பந்தமான நோய்களுக்கு ஏழு பரம்பரையாக சித்தவைத்தியம் செய்துவருவதாக கூறப்படும் சிவராஜின் வாரிசுகள் தற்போதும் சித்திவைத்தியம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.