வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு - 02, கனடியன் வீதியை சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றிவந்த ஆங்கில ஆசிரியரொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரியின் குடும்பத்தகராரிக்கு இவரின் பிரிவால் விடிவுகிடைக்கும் எனும் எண்ணப்பாட்டின் அடிப்படையில் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டே இவரது உயிரை மாய்துக்கொள்வதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை