‘ஒற்றைச் சிறகு’ - ஈழத்துத் திரைப்படம் வெளியாகிறது!!

 


சமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’ திரைப்படம் எதிர்வரும் பங்குனி 14ஆம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது.


கந்தையா இராசநாயகம் மற்றும் கந்தையா கோணேஷ்வரன் ஆகியோரது ரொஹாட் பில்ம்ஸ் தயாரிப்பில் எம்.பி.ஹீரோஸ் பிக்சர்ஸினால் உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படமானது திருகோணமலை வெருகல் மற்றும் மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் ஜனா மோகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த, ஊடக சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது.


திருகோணமலை, மட்டகளப்பு மற்றும் யாழ். மாவட்டக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் உழைப்பில் ‘ஒற்றைச் சிறகு’ திரைப்படம் உருவாகியுள்ளது.


அகல்யாடேவிட், ஜனா ஆர்.ஜே. ஒளிப்பதிவில் கிஷாந்த் இசையில் அபிஷேக்கின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் பூர்விகா இராசசிங்கம் நடித்துள்ளார்.


மேலும், விதுஷா, கிருபா, அகல்யாடேவிட்கு, ஜேந்தன், ஜனா ஆர்.ஜே., பேபி யுதிஷ்டன் தவமுரளி, திலக், சந்துரு, கேனு, உதய், நந்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.


அத்துடன், தவமுரளி தயாரிப்பு குழுத் தலைவராகவும், உதவி இயக்குநர்களாக குஜேந்தன், சந்துரு ஆகியோரும், ஒப்பனையாளராக கிருபா, தக்ஷி மற்றும் ஒலிக் கலவையாளராக தினேஷ் மற்றும் ஒலிப்பதிவு “அ” கலையகம் கிறேசன் பிரசாத் ஆகியோரது முயற்சியில் படம் உருவாகியுள்ளது.


சமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெண்கள் மத்தியில் மட்டுமல்லாது, இளைஞர்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பை பெறும் என, உறுதியாக நம்புவதாக படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் திரைப்படம், எதிர்வரும் பங்குனி 14ஆம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிடப்படவுள்ளதுடன், இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பங்குனி ஏழாம் திகதி வெளியிடப்படவுள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.