ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா!

 


நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனின் 16 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’16 வயது போல் இளமையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் மகனுக்கு 16 வயதா? என ஆச்சரியமாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.


ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ கமல்ஹாசன் நடித்த ’பேர் சொல்லும் பிள்ளை’ உள்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் 1986ஆம் ஆண்டு வெளிவந்த ’முதல் வசந்தம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.


அதன் பின்னர் அவர் பல படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனமாடும் கேரக்டர்களில் நடித்தார். இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’படையப்பா’ திரைப்படத்தில் அவர் அடித்த நீலாம்பரி கேரக்டர் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் அவருக்கு உலகப்புகழ் கிடைத்தது என்பதும் இப்பொழுதும் சிவகாமி தேவி என்ற கேரக்டரை யாராலும் மறக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் அவருக்கு ரித்திக் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தனது மகனின் 16 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக கூறி ரம்யா கிருஷ்ணன், தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.