சிம்புவுக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு!!

 


நடிகர் சிம்பு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்துக்களை தெரிவித்தது என்பதும் அதுமட்டுமின்றி இரவு 12 மணியிலிருந்து அன்றைய நாள் முழுவதும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே. 


இந்த நிலையில் சிம்புவின் சகோதரியின் மகன் சிம்புவுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பரிசை கொடுத்துள்ளார். இந்த பரிசை தனது சகோதரி மகனிடம் இருந்து பெற்றுக் கொள்வது போன்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் சிம்பு பதிவு செய்துள்ளார். 


தனது சகோதரி மகன் கொடுத்த விலை மதிப்பில்லா பிறந்தநாள் பரிசை பார்த்து ஆச்சரியம் அடைந்த சிம்பு அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.


தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு, அதன்பின்னர் ‘பத்து தல’ மற்றும் கெளதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.