பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பிலான புதிய தீர்மானம்!!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை தவிர்க்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி பெப்ரவரி 12 ஆம் திகதி வரை இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக ரஞ்சன் நாமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எனினும், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யக்கூடாது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தொடர்ச்சியாக சபையில் கோரப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே, நீதிமன்றினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.