'சுல்தான்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்!!

 


நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது


மகாபாரதத்தில் கிருஷ்ணர் நூறு வாய்ப்பு கொடுத்து கெளரவர்கள் திருந்தவில்லை, நீ ஒரு வாய்ப்பு தானே கேட்கிறாய், தருகிறேன் என்று வில்லன் கூறுவதும், மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பதிலாக கௌரவர் பக்கம் நின்று இருந்தால்? நீங்கள் மகாபாரதத்தை போர் இல்லாமல் படித்து பாருங்கள்’ என்று அதே மகபாரத்தை வைத்து கார்த்தி பேசும் வசனமும் மாறி மாறி டீசரில் பெற்றுள்ளது


மேலும் இந்த டீசரில் இருந்து ‘சிறுத்தை’ போன்ற மீண்டும் ஒரு ஆக்சன் வெற்றிப்படமாக கார்த்திக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்


சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்வில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இந்த டீசரில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு குஷியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.