ஏமாற்று அரசாங்கத்தை நடத்தும் கோட்டாபய - எதிர்க்கட்சி ஆவேசம்


 அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி செயற்படுவதனை அண்மைக் காலங்களில் வெளிவரும் நாளாந்தப் பத்திரிகைகளின் பிரதான தலைப்புச் செய்திகளைப் பார்க்கும் போது தெளிவாக புலப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகளைக் கண்டு கொள்ளும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை எனவும் ஈஸ்டர் தாக்குதலை வைத்து மீண்டும் அரசியல் செய்வதற்கே முனைகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் அரசாங்கத்தின் நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்நதார்.

அதே போல் மற்றுமொரு பிரதான செய்தி தான் நாட்டில் காடழிப்பு விடயம். நாட்டின் சட்ட விரோத நடவடிக்கைகளை மக்களுடமிருந்து அரசாங்கம் தான் பாதுகாக்கும் இன்று காடழிப்பை அரசாங்கத்திடமிருந்து மக்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களும் இந்த அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு நேர் மாறானா நடவடிக்கைகள் ஆகும். சௌபாக்கியத்தின் தொலை நோக்கில் ஒன்பதாவது இலக்காக சுற்றாடல் பாதுகாப்பு குறித்து பிரஸ்தாபித்துள்ளது.

இன்று நாட்டின் சகல இடங்களிலும் காடழிப்பு அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. உலக மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள 30 இடங்கள் இலங்கையில் உள்ளன. அவற்றிலும் இந்தக் காடழிப்பும், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறுகிறது.

இந்தக் காடழிப்பால் நகர் புறங்களில் குறிப்பாக கொழும்பில் வாயு மண்டலத்தில் ஒக்ட்சிஜன் குறைந்துள்ளது. எங்களை அறியாமலயே சுவாச ரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட வன்னமுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மொத்த அறிக்கையில் ஒரு பாகம் தான் வெளிவந்துள்ளது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது என்ன கூறி ஆட்சிக்கு வந்தனர்? தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் கர்தினலை சந்தித்த போது ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதாகக் கூறினார்.

இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்து விட்டது. புதிதாக என்ன செய்தார்? கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆணைக்குழு அறிக்கையைத் தான் இன்று. வெளியிட்டுள்ளனர்.

கர்தினல் எழுப்பும் உண்மைகள் தான் எங்களுக்கும் வேண்டும். சஹ்ரானின் பின்னனியில் இருந்தவர்கள் யார்? தாக்குதலின் உண்மையான தேவையுடையவர்கள் யார்? நிதி உதவி வழங்கியவர்கள் யார்? உள்ளிட்ட அடிப்படை முக்கிய விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகளைக் கண்டு கொள்ளும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை. ஈஸ்டர் தாக்குதலை வைத்து மீண்டும் அரசியல் செய்வதற்கே முனைகின்றனர். அதிகார இருப்பை பெரும்பான்மை மக்களிடம் பலப்படுத்தவே முனைகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து நீதியான தீர்வுகள் வெளிவராது என்ற தோற்றப்பாட்டைத் தான் கர்தினல் கூற வருகிறார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளிலும் இந்த அரசாங்கம் பொய்யர்கள் என்பதை தான் நிரூபித்துள்ளனர்.

ஜெனிவா விவகாரத்தையும் கையாளத் தெரியாத அரசாங்கம் கர்தினல் ஈஸ்டர் பிரச்சிஉயை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றால் எவ்வாறு கையாளப் போகிறார்கள். இராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய விடயங்களை செய்யாமல் விட்டதன் விளைவைத் தான் இந்த அரசாங்கம் சந்தித்து வருகிறது.

கர்தினலையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் ஏமாற்றி, பான் கீ மூனையும் ஏமாற்றி ஏனைய பல நாடுகளையும் ஏமாற்றி இராஜந்திர ரீதியாகவும் பொய்யராகி ஏமாற்று அரசாங்கத்தை முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.