கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 பேர் பரீட்சை எழுதுவதாக தகவல்

 


இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

இந்த நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கி விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.