நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி !

 


இந்தி சினிமா உலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1982-ம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவருடய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் எனது உள் உறுப்புகள் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன என்று கூறி இருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் திடீரென அவரை கொரோனா தாக்கியது. மும்பை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார்.

ஆனால் இப்போது திடீரென அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை அமிதாப்பச்சனே அவருடை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒற்றை வரியில் அந்த செய்தி உள்ளது. அதில், ‘மருத்துவ சூழ்நிலை, ஆபரேசன். இதற்கு மேல் விவரிக்க முடியாது’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அவருக்கு உடல்நிலையில் என்ன செய்கிறது. எந்த வகையான ஆபரேசன் நடக்கிறது? ஆபரேசன் நடந்துவிட்டதா? அல்லது நடக்கப்போகிறதா? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடக்கிறது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.