மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

 


கொரோனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்னர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காதமை காரணமாக அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலைத் தடுக்க தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றி செயற்பட வேண்டும் என அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.