கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான பதுங்கு குழி!


 கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவின், திகன, அம்பகோட்டை பிரதேசத்தில் மர்மமாக நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்னறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறைக்குள் 20 அடி ஆழமான மர்ம குழி ஒன்று தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளார்

தெல்தெனி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் பிரிவு அதிகாரிகள் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

திகன பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்த வீட்டை வாடகைக்கு பெற்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய தெல்தெனிய விசேட பொலிஸ் குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வளவு ஆழமான குழி எதற்காக தோண்டப்பட்டுள்ளதென பொலிஸார் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்ள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதையல் போன்ற தொல்பொருள் பெறுமதியாக சொத்துக்கள் தேடும் நோக்கில் வீட்டினுள் இவ்வளவு ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு பெற்றவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.