அமெரிக்காவால் கூட தடுக்க முடியவில்லை!


 9/11 தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னரேயே தகவல்களை அமெரிக்கா பெற்ற போதிலும் இந்த தாக்குதலை அமெரிக்காவால் தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நூலக திறப்பு விழாவில் இன்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்றும் அவர் கூறினார்.

"உலகின் மிக சக்திவாய்ந்த நாடு தனது பாதுகாப்பு தலைமையகம் - பென்டகன் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழப்பதைத் தடுக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஞானசாரதேரரும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.