மகிந்த குடும்பத்துக்கு வந்த அவசர தகவல்!


 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எனது தந்தை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று எமக்கு செய்தி கிடைத்தது.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு குழுவினர் வாகனத்தில் வந்து இறங்கி எம்மை வெளியேறக் கூறினர். அந்த ஒரு மணி நேரத்திற்குள் எமக்கு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நிலையில் எனது செல்லப்பிராணிகளை எங்கே கொண்டு செல்வது என்பதே எனக்கு பெரும் கேள்வியாக இருந்தது

நாட்டில் ஆட்சியைப்பிடிக்கும் அடுத்த ராஜபக்ஸ யார் என்பது எனக்கு தெரியும். எனினும் அதை இப்போது கூற முடியாது.

மேலும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு வரவேண்டும். அப்போதுதான் ஒரு போட்டி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடன் இருந்தவர்கள் அவருக்கு மூளைச்சலவை செய்தே பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தவைத்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.