இராணுவத் தளபதிக்கும் செலுத்தப்பட்டது கொவிட் தடுப்பூசி!

 


கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் - 19 தடுப்பூசியினை செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னரங்கப்பணியாளர்களில் இறுதி நபராக தான் தடுப்பூசியைப் பெறுவதாகவும், அனைத்து முன்னரங்கப் பணியாளர்களும் தடுப்புமருந்தைப் பெற்ற பின்னர் தான் தடுப்புமருந்தைப் பெற்றுக் கொள்வேன் என அறிவுறுத்தியதாக ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முப்படையினருக்கு மட்டுமான தனியான இன்னொரு தடுப்புமருந்து தொகுதியைப் பெற்றுத் தருவேன் என உறுதியளித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.