உயிர்த்தஞாயிறு தாக்குதல் சாராவின் நிலை என்ன?

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கட்டுவபிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவி என்று கூறப்படும் சாரா இருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது இறந்த 11 பேரில் 10 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளுடன் இந்த சடலங்களின், டி.என்.ஏ பரிசோதனையை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார், அல்லது இறந்திருக்கலாம் என்ற தவறான தகவலை பரப்பிய பின்னர் அவர் வேறு இடத்தில் ஒளிந்து கொண்டிருக்கலாம். இதைத் தீர்மானிக்க தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ”என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.