சிறைக்காவலருக்கு ஏற்பட்ட நிலை!

 நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ‘செல்பி’ எடுக்க அனுமதித்த சிறைக்காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு நேற்றையதினம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த செல்பியை எடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பத்திற்கு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்காவலரே காரணம் என சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த சிறைக்காவலரின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.