ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

 பிரபல பொலிவுட் நடிகர்  ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் ரன்பீர் கபூர்  கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையும் எடுத்து வருகிறார்.

தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் அவரின் தாயார் நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.