சென்னை வருகிறார் ராம்நாத் கோவிந்த்!

 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை)  டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வருகிறாா்.

நாளை வேலூர் செல்லும் அவர் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறாா்.

நாளை மறுநாள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு தனி விமானத்தின் மூலம் மீண்டும் டெல்லி செல்கிறாா்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா்.

அவர்கள் சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.