அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக பா.ம.க அறிவிப்பு!

 பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி மூலம் அவசர ஆலோசனை நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதன்போது  பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாமக தனது தேர்தல் அறிக்கையையும் கடந்த வாரம் வெளியிட்டது.

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பாமக இன்று நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.