வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் – மம்தா பானர்ஜி!

 நீங்கள் விரும்பவில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நந்திகிராமில் இன்று (திங்கட்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்  மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ நான் வேட்புமனு தாக்கல் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் தாக்கல் செய்யமாட்டேன். என்னை உங்கள் மகளாக கருதினால்தான் வேட்புமனு தாக்கல் செய்வேன்.

நான் வெளிநாட்டவர் என்று சிலர் சொல்கிறார்கள். நான் ஒரு பெங்காலி. தில்லியைச் சேர்ந்த நீங்கள் வெளி நபர்கள் அல்லவா?” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் திகதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

திரிணமூலில் இருந்து பாஜக சென்ற சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக மம்தா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.