சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டும்!

 2019 ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்திடம் உதவி கோரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை காரணமாக ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவகுத்த காலத்தில் இரண்டு அரசாங்கங்கள் இருந்ததாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும் தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்களை இந்தியா முன்னரே வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டுமானால், சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.