திருமணம் குறித்து மனம் திறக்கும் கீர்த்தி சுரேஷ்!

 தமிழ் மற்றும்  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ள தனக்கு நேரம் இல்லை என்றும் திருமணம் குறித்த எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் எனது திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கை பற்றிய வதந்திகளை பரப்புவதற்கு பதில் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு பிடித்த நடிகர் விஜய் மற்றும் சூர்யா என்றும் ‘மகாநதி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய சாதனை என்றும் அதை உயிருள்ளவரை மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு என்று ஒரு எல்லை இருக்கிறது என்றும், அந்த எல்லையை நான் மீறமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.