காதலே என் சுவாசம்,,,!!


உனக்கும் எனக்குமான

நெருக்கத்துக்குள்
காற்று கூட புக முடியாது
சுவாசங்கள் மட்டும்
மாறிக்கொள்ளும்
என் நெஞ்சில் நீ
தலை வைத்து
சாய்

ந்த வேளை
இந்த உலகத்தில்
நான் மீண்டும்
ஒரு புது
பிறவியாகினேன்
உனக்கும் எனக்குமான
பிரியத்தை
வார்த்தைகள் கொண்டு
வர்ணிக்க முடியாது
வானில் சூரிய சந்திரர்
நட்சத்திர குவியல்கள் போல்
நிலத்தில் அழகிய பச்சை
பசேல் வெளிகள் காடுகள்
மலைகள் ஆறு கடல்
நீர் வீழ்ச்சிகள்
பூமிக்கு அழகு போல்
என் வாழ்விற்கு
முழுமை அழகு நீ
மரத்திற்கு வேர் போல்
என் வாழ்விற்கு நீ
மூச்சாய் சுவாசமாய்
பிரியத்தின்
நீட்சி நீ
பிரிவென்பதே
நமக்கு
மரணத்தில் கூட
வந்து விடக்கூடாது
நமது சுவாசமும்
ஒரு மிக்க
நின்று விடவேண்டும்
நீ யல்லால் நான்
இல்லை இவ்வுலகில்
என் பிரியமானவளே..

#இவன்_பாவலன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.